உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

என்பது அது.

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

வந்தழிக்கும் பகை உண்டு. ஆனால் தன்னோடு இருந்து கொண்டே தன் நகைப்பையும் உவப்பையும் அழிக்கும் பகை சினமென்னும் பகையாகும் என்றும் கூறுகிறார்.

“நகையும் உவகையும் கொல்லும் சினத்திற் பகையும் உளவொ பிற"

என்பது அது. மேலும்,

66

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”

(304)

என்று மிக எச்சரிப்பூட்டவும் செய்கிறார். இவ்வளவையும் கடந்து சினம் என்னும் எரி குழியில் வீழ்ந்தே தீர்வேன் என்பாரை எவர்தான் காத்துவிடமுடியும்?

இது நீர்ச்சுழி: இது உள்வாங்கு அளறு; இது சறுக்குப் பாறை என எச்சரிக்கையும் தடுப்பும் இருப்பினும் 'வீழ்வேன்' என்பாரை எவரே காப்பார்?

“சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று”

(307)

என நிலத்தில் அறைந்தும் கல்லில் அறைந்தும் கைதப்ப முடியுமா எனக் கன்னத்தில் அறைவார் போலக் கூறியதை உணர்ந்தால் சினச் சிக்கல் சிறிய சிக்கலாய்த் தீர்வுகாணற் குரியதாகவே அமையும்.

இன்னாசெயல்

சினங்கொண்டார் சொல் இன்சொல்லாகவா இருக்கும்? கடுஞ்சொல்லும் அல்லவோ அவர் உதிர்ப்பவை. அத்தகைய நிலையிலும் அவரை அமைதியுறுத்த ஒரு வழி காண்கிறார் வள்ளுவர்.

"இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன் கொலொ வன்சொல் வழங்கு வது"

என்கிறார்.

(99)

வன்சொல் கூற வாய்திறக்கும் அன்பனே, நீ இன்சொல் கேட்டது இல்லையா? வன் சொல்லும் கேட்டது இல்லையா? பிறர் சொல்லும் இன்சொல் உன்னை எப்படி ன்பத்தில்