உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

219

ஆழ்த்துகின்றது? பிறர் சொல்லும் வன் சொல் உன்னை எப்படித் துன்பத்தில் ஆழ்த்துகின்றது? இப்படித்தானே நீ சொல்லும் இன்சொல்லும் வன்சொல்லும் பிறர்க்கு இருக்கும். இதனை எண்ணிப் பார்த்தால் வன்சொல் கூற உனக்கு வாய் எழும்புமா? என்கிறார்.

இன்னாத சொல்லைச் சொல்லும் அளவில் நில்லாமல் இன்னாதவற்றைச் செய்தலுக்கும் முந்துவார் உளரே! அவரை நோக்கி, இதே வாய்பாட்டு முறையில்,

என

"இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கட் செயல்”

'தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல்"

“வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து

(316)

(318)

(250)

அவன் தன் உள்ளுள் நோக்கி உணரும் வகையில் உரைக்கிறார்.

மெலியான் ஒருவனைப் பழிக்கவும் அடிக்கவும் ஓடுகின்றாயே நீ, வலியான் ஒருவன் உன்னைப் பழிக்கவும் அடிக்கவும் முந்து நிற்கும் நிலையில் உனக்கு எத்தகைய அச்சமும் நடுக்கமும் அரற்றலும் அல்லலும் தோன்றும்! அந்நிலையை எண்ணிப் பார்த்தால் அதே அடாச் செயலில் நீ இறங்குவாயா என்கிறார்.

“நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்"

என்று, "நீ எதைச் செய்கிறாயோ அது உனக்கும் வரவே செய்யும்" என்றும் கூறுகிறார்.

நீ ஒழுக்க முடையவன் தானா? அப்படி ஒழுக்க முடையவன் எனின் உன்னால் தீய சொற்களை மறந்தும் கூடச் சொல்ல இயலாதே; நீ சொல்வதை நோக்க ஒழுக்க மில்லாதன் யான் என்று உன்வாயால் பறையறைவது போல் அல்லவோ உள்ளது. நீ ஆயிரம் சொற்களை நயமாகச் சொன்னாலும் தான் என்ன, ஒரோ ஒரு சொல் சொல்லக் கூடாச் சொல்லைச் சொன்னது, அத்தனை நற்சொற்களையும் பாழாக்கி விட்டதே!