உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம் -39

துளி நஞ்சும் துளி அருவறுப்பும் அனைத்தையும் நஞ்சும் அருவறுப்பும் ஆக்கிவிடுவது இல்லையா? அப்படி அல்லவோ உள்ளது உன் சொல்" என உளவியல் தேர்ந்த ஆசிரியப் பெருமகனாராக உரைக்கிறார் திருவள்ளுவர்.

“ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

55

வழுக்கியும் வாயாற் சொலல்.' (139)

“ஒன்றானும் தீச்சொற் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.

என்பவை அவை.

வாய்மை

(128)

உள்ளதை உள்ளவாறு கூறலும், நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறு கூறலும் வாய்மை எனப்படுகின்றன. இவை வாய்மை தான். ஆனால், இவ்வாறு கூறலால் பிறர்க்குத் தீமை ஏற்படுதாயின் வை வாய்மை இலக்ணத்தொடு பொருந்தாதன வாம்.

வாய்மை எனப்படுவது எது என்றால், எந்த ஒரு தீமையும் வாராத சொல்லைச் சொல்வதாம். அவ்விலக்கணத்திற்கு மாறானது வாய்மை ஆகாது.

சில வேளைகளில் பிறர் நன்மை குறித்துப் பொய்யுரைக்க வேண்டியும் நேரலாம். அப் பொய்மை தன்னலம் குறியாமல் பிறர் நலம் குறித்துக் கூறப்படுவதெனின் அது வாய்மை எனக் கூடாதது எனினும், வாய்மை இடத்தில் வைக்கத் தக்கதாக அமையும். பிறர் நலம் கருதிய இவ்வாய்மையைப் போலும் நல்லதொன்றை யாம் கண்டடே இல்லை" என்கிறார் வள்ளுவர்.

"வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.”

“பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த

நன்மை பயக்கும எனின்,

99

(291)

(292)

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.

என்பவை அவை.

உண்மை உயர்ந்ததே எனினும், அதனாலும் பிறர்க்குத் தீமை ஏற்படல் கூடாது என்றும், பொய் தீயதே எனினும் அதனால் நன்மையுண்டாம் இடமும் உண்டு என்றும்