உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் சிக்கல்களும் வள்ளுவத் தீர்வுகளும்

221

இருபாலும் ஏற்படும் உலகியல் சிக்கல்களைத் தீர்க்க வள்ளுவ வாய்மையர் கண்ட வழி ஈதாம்.

கொலை வெறியனாக வருவான் ஒருவனுக்கு அவன் மகனோ, மனைவியோ மறைந்திருக்கும் இருப்பிடத்தை அறிந்தும் அறியேன் என்றும் அவ்வழிப் போனார் என்றும் வேறு போக்குக் காட்டி, வெறி ஓய்ந்த நிலையில் இடித்துரைத்து அமைதி யுறுத்திச் சேர்பித்தல் குடி நலம் கருதிய தாகலின் அப்பொய்மை பொய்மை ஆகாது; வாய்மை இடத்ததேயாம்.

எதிர்பாரா விளைவுக்கு ஆட்பட்டான் ஒருவனைப் பற்றிய செய்தியை நோய் வாய்ப்பட்ட அவன் முதியர்க்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்தலும், முதுவராய் நோயராய் இயற்கையுற்றாரை எட்டாத் தொலைவில் கல்வியில் ஈடுபட்டிருப்பானுக்குச் சிறிது காலம் தெரியாமல் மறைத்து வைத்தலும் தன்னலங் கருதியது ஆகாமல் அவர் நலம் கருதிய தாகலின் வாய்மை இடத்ததேயாம்.

ஓரோ ஒரு மகனை இழந்தாள் ஒருத்தி, உண்ணாது பருகாது பன்னாள் கிடந்து, ஓராற்றான் தேறித் தேறிச் சற்றே உலவித் திரிந்து பின்னர் ஆறிய நிலையில் அவளைக் கண்ட உறவினள் ஒருத்தி, "குழந்தையைச் சாகக் கொடுத்தும் குதிர் போல இருக்கிறாள்" என்று ஒரு சொல் சொல்ல, அச் சொல்லே கூற்றாய் அவளைப் படுக்கையில் கிடத்தி பாடையிலும் கிடத்தியமை உண்டு. இது வாய்மை எனப்படுமோ?

வள்ளுவ வாய்மை, சிக்கல் தீர்வே தீர்வே அன்றிச்

ஆக்குவதன்றாம்.

அழுக்காறு

சிக்கல்

அழுக்காறு என்பது பொறாமை. அது பொறுமைக்கு எதிரிடைச் சொல் அன்று. பிறர் செய்யும் தீமையையும் தம்மை மீறிய செயல்களையும் பொறுத்துக் கொள்ளுதல் பொறுமை. ஆனால் இப்பொறாமையோ பிறர் நலங்கண்டு பொறுத்துக் கொள்ளமாட்டாமல் வெதும்பிக் கொண்டிருக்கும் நிலை யாகும். இங்கே பிறர் தாக்கம் வெதுப்ப வில்லை. பிறர்

ஆக்கமே வெதுப்புகின்றதாம். அதனால் அக்கொடுந் தன்மையை “அழுக்காறு என ஒரு பாவி என்கிறார்

வள்ளுவர்.

பிறர் நலங்கண்டு புழுங்கும் அது, தன்னை வெதுப்பி வெதுப்பித் தன்னை அழிக்கும்; தன் ஆக்கத்தை அழிக்கும்;