உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

என்றும் நெருப்பிடையில் இருந்தால் போன்ற எரிவை உண்டாக்கிக் கொண்டே இருக்கும் என்கிறார்.

பொறாமை உடையவனைக் கெடுக்க வேறு பகை எதுவும் வேண்டியது இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அவனை அழிக்கப் போதுமான தாகும் என்றும் கூறுகிறார்.

“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்."

வழுக்கியும் கேடீன் பது."

"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

(168)

(165)

என்பவை அவை.

வள்ளுவரே நீவிர் சொல்வது போலப் பொறாமையாளன் கெட்டுப் போகாமல் செல்வச் செழிப்பனாய் விளங்குகிறானே; நல்லோன் ஒருவன் வறியனாய்த் தொல்லையுறுகின்றானே! ஆங்காங்கு நாங்கள் காணத்தானே செய்கின்றோம் எனின் அவ்வள்ளுவப் பெருந்தகை குறுமுறுவல் காட்டி,

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.'

என்கிறார்.

55

(169)

"பொறாமையாளன் வளமும், நல்லவன் வறுமையும் மெய்யாக வளமும் வறுமையும் தாமா? நீ நினைத்துப்பார்! உனக்கு உண்மை புலப்படும்" என்று தெரிவிக்கிறார்.

பொறாமையாளன் தான் எவ்வளவு செல்வம் பெற்றிருப் பினும் தான் செல்வன் என நிறைவு கொள்கின்றானா? அவன், தன் செல்வம் போதாது போதாது என்று ஆசைப் பேயாய்த் திரியத்தானே செய்கின்றான்! நல்லவன் தான் கொண்ட வறுமையை வறுமை என்றா கருதுகின்றான்? அவன், தன்னினும் வாய்ப்புக் குறைந்தவர்களை எண்ணி, அவர்களிலும் தான் எவ்வளவோ நலமாக இருப்பதாக அமைதி கொள்கின்றானே! இவற்றை எண்ணினால் பொறாமையாளன் செல்வம் செல்வமா? நல்லவன் வறுமை வறுமையா?' எனத் தெளிவு படுத்துகிறார்.

களவு

களவு என்பது காரறிவாண்மை என்கிறார் வள்ளுவர். அறிவுடையவரும் கூடக் களவில் ஈடுபடுதலைக் கண்டு அவர்