உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

21

இளைஞன் இருக்கின்றான் கோட்டைக்குள்; எதிரிகள் இருக்கின்றனர் கோட்டையின் உள்ளும் புறமும்: கட்டுக்காவல் இவ்வளவென்று இல்லை; அழிவு வேலை எவ்வளவு செய்தாலும் மூளையிலே கிள்ளி எறிகின்றான் சூழ்ச்சித் திறமும் ஊக்கமும் படைத்த மாமன்! சுற்றுப் பகைவர் வஞ்சம் என்னாம்?

பகைவர் உள்ளம் வெதும்பியது; மூக்கில் புகை கப்பியது; கண்கள் நெருப்பாயின; இளைஞனை இன்று அழித்தே தீர்வோம்; ஆட்சியைப் பற்றியே ஆவோம்; என்று முனைந்தனர்; எரி நெருப்பு எடுத்தனர்; இளைஞன் இருக்கும் கோட்டைக்குள் மூட்டினர்.

பற்றிய தீ சுற்றிப் படர்ந்தது; பண்புடையோர் உள்ளம் பதைத்தது; பகைவர் உள்ளம் மகிழ்ந்தது; தாய்மார் உள்ளம் தவித்தது; குழந்தைகள் உள்ளம் திகைத்தது; மாமன் உள்ளம் மருகியது; உற்ற துணைவர் உள்ளம் உருகியது. நம் இளைஞன் உள்ளமோ எழுச்சி கொண்டது.

சிந்திக்கப் பொழுது இன்றிச் செயலாற்றத் தொடங்கினான் இளைய வீரன். மீனுக்கு நீத்தும், புலிக்குப் பாய்ச்சலும், சிங்கத்திற்கு முழக்கும், யானைக்குப் பீடு நடையும் பயிற்றுவித்தவர் எவர்? பழக்குவித்தவர் எவர்? இவை இயற்கை என்றால் எனக்கும் கோட்டையைத் தாவுவதும், கேட்டைத் தகர்ப்பதும், நாட்டைக் காப்பதும் இயற்கை! கோட்டை என்ன கோட்டை! எனக்கு எளிய வேட்டையே என நொடிப்போது எண்ணி, மீன்போல் கிளர்ந்து, சிங்கம்போல் செம்மாந்து, புலி போல் பாய்ந்து, யானை போல் நடந்து கோட்டையை விட்டு வெளியேறினான்!

'இளைஞன் இறந்தான்' என இன்புற்று மங்கலப் பறை முழக்கும் பகைவர் இடையே, இளைஞன் வெளியேறி முடிசூடிக் கொண்டுள்ளான் என்ற சொல் சாப்பறை கொட்டியதாயிற்று சாவாமல் சவம் ஆயினார் போல ஆயினர் சுற்றப் பகைவர்கள்!

இளைஞனுக்கு ஆற்றல் மிகுதி; அதனினும் மிகுதி அவனுக்கு வாய்த்த அரிய துணை; ஆற்றலும் அரிய துணையும் இருந்தால் போதுமா? பகைவரும் புகழ, வசை கூறுவோரும் வாழ்த்தி வணங்க செயல் திறம் அல்லது வினையாண்மை வேண்டு மல்லவா! நம் இளைஞனிடம் மிகுதியாக அமைந்திருந்தது வினை நலம்!

இளைஞன் காளையானான்; ஆற்றல் பேராற்றல் ஆயிற்று; வினைத்திறம் விஞ்சியது; காவிரிக் கரையிலே உலவிய அவனுக்கு,