உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

39

"என் பயல் இங்கு இருக்கிறானா?" என்றான் மூக்கன். “ஓர் ஒல்லிப் பயல்; மாநிறம்; கால் சட்டை மட்டும் போட்டவன்; காதில் கடுக்கன் அவன் தானே!" என்றான் வீட்டுக்காரன்.

"ஆம்; அவனேதான்! எங்கே இருக்கிறான்?" என்று துடிப்புடன் கேட்டான் மூக்கன்.

'இதோ பார் இந்தத் தெரு வழியே ஓடி, அந்தச் சந்திலே திரும்பினான். ஓடு; ஓடு; இப்பொழுதுதான் போனான். விரைந்து போனால் பிடித்து விடலாம்" என்றான் வீட்டுக்காரன்.

மூக்கன் ஓடினான். நெடுநேரம் தேடியலைந்தும் காணாதவனாகச் சோர்ந்து போய் வீட்டைச் சேர்ந்தான். இதற்குள் கோபமும் சிறிது சிறிதாகக் குறைந்துவிட்டது. கோபம் போனபின் தான் செய்தது என்னவோ போல் இருந்தது. கட்டிலில் லில் குப்புற விழுந்து புரண்டான். உறங்கவா முடியும்? என்னென்னவோ உளறினான்.

மணிமுத்துவினிடம் நடந்ததை விளக்கமாகக் கேட்டறிந் தான் வீட்டுக்காரன். காலத்தால் உதவியதற்காகப் பெரிதும் மகிழ்ந்தான். "நீ இப்பொழுது வீட்டுக்குப் போகவேண்டாம்; இங்கேயே இரு. நானே மாலையில் உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். அதற்குள் உன் அப்பா கோபம் தீர்ந்துவிடும்" என்று கவலையை ஆற்றி, பசியையும் மாற்றி வைத்திருந்தான்.

மணிமுத்து அஞ்சிக் கொண்டு வேறெங்கும் போய்விடக் கூடாதே என்னும் கவலையில் நின்றிருந்த காத்தாயிக்கு வீட்டுக் காரன் சொல் தேன் போல் இருந்தது. இனிக் கவலையில்லை என்று வீட்டுக்குப் போகத் தொடங்கினாள்.

ஆனால், போகவிடாதவாறு ஒருவன் வந்தான். அவன், "ஐயா இருக்கிறாரா?" என்று மெய்யப்பன் மகனிடம் கேட்டான். மெய்யப்பன் அவன் வருவதைத் தொலைவிலே கண்டு ஒளிந்து கொண்டான். 'அப்பா,வெளியில் போயிருக்கிறார்" என்று சொல்லிவிடுமாறும் மகனிடம் சொல்லியிருந்தான். அப்படியே அவன் மகனும் சொல்லி விட்டான். மெய்யப்பன் மைந்தன் அல்லவா! அவன் சொல்லில் ஐயம் கொள்ளலாமா? தேடி வந்தவன் புறப்பட்டான். "கடன் வாங்கி நெடுநாள் ஆகின்றது; வந்த நேரமும் பார்க்க முடிவதில்லை; அவராகப் பணம் அனுப்புவதும் இல்லை; கடிதம் போட்டாலும் பதில் போடுவது இல்லை. எப்படித்தான் பணத்தை வாங்கப் போகின்றேனோ? முதலாளியிடம் நல்ல பெயர் எடுக்கப் போகின்றேனோ?" என்று