உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12.பொய்யா விளக்கு

நீகிரோ ஒருவனின் உருவச்சிலையை ஓர் இளைஞர் கண்டார். அந்நீகிரோவின் தோற்றம் அவ்விளைஞர் உள்ளத்தை உருக்கியது. கண்ணீர் வடிக்க வைத்தது. இப்படியான தோற்றமும் வறுமையும் உடையவர்களும் உலகில் வாழ்கிறார்களா? அவர்களைக் காக்க எவரும் முன்வர வில்லையா? துயர்க்கும் வறுமைக்கும் எனவே பிறந்தாரும் உலகில் உளரா? எனப்பல நினைத்தார். அந்நினைவே கனவும் நனவும் ஆயின.

இளைஞர் பெயர் ஆல்பிரட் சுவைட்சர். அவர் தந்தையார் லூயி சுவைட்சர்; சமய போதகர். ஆல்பிரட்டின் இளகிய உள்ளம் சமய இயல் தத்துவ இயல் ஆகியவற்றை நாடியது. அக்கல்வியில் சிறந்தார். திருக்கோயில் போதகர் பணியும் ஏற்றார். இசைத்துறையில் சிறந்தார்.

ஒரு விளம்பரத்தைச் சுவைட்சர் ஒருநாள் கண்டார் அதில் "ஆபிரிக்காவைச் சேர்ந்த காங்கோ பகுதியில் வாழும் மக்களுக்கு அருள் தொண்டு செய்ய ஆள் இல்லையா? இறைவன் தொண்டுக்குத் தம்மை ஒப்படைக்கும் அருளாளர்கள் உடனே வேண்டும்" என்று வேண்டுதல் இருக்கக் கண்டார். அவர் இளமையில் கண்ட நீகிரோ சிலை தட்டி எழுப்பியது. அத்தொண்டுக்குத் தம்மை ஆட்படுத்த அது தூண்டியது.

தொண்டு புரிவதற்காகவே மருத்துவக் கல்வி கற்றார். மருத்துவமனைப் பயிற்சியும் பெற்றார். கெலன் பிரசுகலோ எனும் ஒரு மங்கையை மணந்து அவரை மருத்துவச் செவிலியர் பயிற்சி பெறச் செய்தார். தம் இசைத் திறத்தால் தம் தொண்டுக்கு வேண்டும் தொகையைத் திரட்டினார்.

ஆபிரிக்கா சென்ற சுவைட்சர், கரடு முரடான மேடு பள்ளம் அமைந்த பாதையில் குதிரை வண்டி ஒன்றைக் கண்டார். அவ்வண்டி தாங்காத அளவுக்குப் பாதம் இருந்தது. அதனை இழுக்க மாட்டாமல் திணறிய குதிரைகளை நீக்கிரோக்கள் இருவர் வண்டியில் இருந்து கொண்டு கடுமையாக அடித்து ஓட்டப் பாடுபட்டனர். ஆனால் சுவைட்சர், அவர்களைக் கீழே