உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் -39 8

ஆகியவற்றால் நூல்கள் பல படைத்தார். “பால் அடிகளின் பத்தி நெறி பாக் இசைவல்லார்" “நாகரிகத்தின் தத்துவம்” “கன்னிப் பெருங்காட்டின் கங்கில்" என்பவை அவற்றுள் சில.

நாகரிகத்தின் தத்துவம் என்பது, கிழக்கு, மேற்கு நாடுகளின் மெய்ப்பொருள் கொள்கைகளைப் பற்றியது. அதில் அவர் திருக்குறளைப் பற்றி எழுதியுள்ள கருத்துகள் உலகவர்க்கு உய்வு காட்டுவன. அவற்றுள் சில.

"உலகம் மாயை என்று கருதிய இந்தியக் கருத்துலகில் வள்ளுவர் தம் அறிவுச் சுடரால் நல்லொழுக்க நெறி பரவ விட்டுள்ளார்.

"பகவத் கீதை இறைவனிடத்தில் மனிதன் அன்பு செலுத்த வேண்டும் என்னும் குறிக்கோளைக் கூறுகிறது."

மனிதன் மனிதனுக்குக் காட்டும் அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்னும் கருத்து அந்நூலில் கூறப் படவில்லை. அன்பு, அருள் தொண்டாக மலர வேண்டும் என்று திருக்குறள் ஒன்றே வலியுறுத்துகிறது.

19

"மனுவின் நூலில் மாயை ஓங்கி நிற்கிறது; திருக்குறளில் அஃது ஒடுங்கிக் கிடக்கிறது. கைம்மாறு இல்லை எனினும் நல்ல செயலைச் செய்வதால் மனநிறைவு உண்டாம். ஆகவே நல்ல செயல் செய்ய வேண்டும் என்று திருக்குறள் அறிவுறுத்துகிறது.”

"ஒழுக்கமே மனிதன் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் துணிந்து வற்புறுத்தினார். மனிதன் தனக்குத்தானே செய்ய வேண்டிய கடமைகளையும், பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பண்பாடும் அறிவும் தோன்றக் கூறியுள்ளார்.

"உலகத்தின் காணக் கிடைக்கும் இலக்கியப் பரப்புள் இத்தகைய உயர் அறிவுரை வேறு எந்நூலிலும் இல்லை. திருக்குறள் ஆசிரியர் வழியாகவே 'உலகம் உண்மை' என்னும் கொள்கை பரவி, பல சமயத் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டன."

'வள்ளுவர் வழிநடை' 'வையக வழிநடை' என்பதற்கு 'ஆல்பிரட் சுவைட்சர் ஒளிவிளக்கேற்றி வைக்கிறார். "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்பது பொய்யா மொழி!