உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வழிநடை

49

வாங்கவும் மருத்துவரை அழைக்கவும் வந்த எனக்கு இப்பாடு... அப்பா!... அப்பா!..ஐயோ!..

(எழுந்திருக்க முயல்கிறான்; முடியவில்லை.)

தேள் கடிக்கு மருந்து தேடப் போன இடத்திலே பாம்புக் கடிக்கு ஆளானது போல அல்லவா இருக்கிறது. ஐயோ! இடுப்புப் போய் விட்டதா? எந்தப் பாவிப்பயல் எனக்கு என்று இந்த வாழைப்பழத் தோலைப் போட்டானோ? அவன் விளங்குவானா? ஆ! ஐயோ! வலிக்கிறதே! சாலை என்றால் அவன் சொந்த நிலமா? எத்தனை பேர் போவார்கள் வருவார்கள்? சே சே! இந்த நாட்டில் இருக்கிறவர் களுக்குப் பொது நலம் கிடையவே கிடையாது; பொது அறிவுங்கிடையாது. யோ! நான் என்ன செய்வேன்.

டே! டே! இவனைப் பாரடா!

ஆ! ஆ! என்ன அழகு!

விழு! விழு! விழ வேண்டியதுதான்! இடுப்பு ஒடியவில்லை!

பாரடா துடிக்கிற துடிப்பை.

(பலர் கூடி விடுகின்றனர்.)

ஒருவன்

இன்னொரு

வேறொரு

மற்றொரு

பிறிதொரு

இன்னொரு

வேறொரு

இரங்கும் ஒருவன்

மற்றொருவன்

அதோ பார்! பல்லைக் கடிக்கிற கடிப்பை! ஏன் பார்த்து நடந்தால்...

அழமட்டும் தெரிகிறது, அறிவு இல்லை. அய்யோ பாவம்! பலமான அடிபோல் இருக்கிறது.

இரத்தம் மடை பிடுங்கிப் போகிறதைப் பாரு!