உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம்-39

அவர்களின் தன்னலங்க கருதா உள்ளத்திற்குத் திருக்குறள் பேரவை என்றும் நன்றியோடு விளங்கும்.

குறள்நெறிச் செல்வர் சி.சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், திருவள்ளுவர் தம் திருவடிக்கே பதித்த நெஞ்சும், குறள் நெறிகளைப் பரப்புவதற்கென வழங்கும் கைகளும், தொண்டு செய்வதற்கென துவளாது நடக்கும் கால்களும் கொண்ட பெருமகனார் ஆவார். அவர்தம் கைமாறு கருதாத் தொண்டினைப் போற்றுவோம்.

திருவள்ளுவர் நெறிகளை நாடுமுழுமையும் வாரி வழங்கி வரும் தம் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஒளவை நடராசன் அவர்கள் மிகச் சிறந்த முறையில் அணிந்துரை வழங்கி நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்களுக்கு நம் பேரவையின் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

நூலை அழகிய வடிவில் அச்சிட்டு, காலத்தில் வழங்கி உதவிய மாணிக்கம் அச்சபத்தார்க்கும், காலங் கருதாது வந்து 'மெய்ப்புத்', திருத்தம் செய்து பேருதவி புரிந்த புலவர் ஆ. இராமசாமி அவர்களுக்கும் பேரவையின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வையகம் தழுவிய வாழ்வியல்' என்னும் இந்நூல் மிக னிமையான நூல். இளைஞர்களும், பெரியோர்களும் படித்து பயன் பெற வேண்டும். குழந்தைகளின் உள்ளத்தில் பதிந்திட வேண்டும் என்பதற்காகத் திருக்குறள் பேரவை இந்நூலை வெளியிட்டு மகிழ்கிறது.

எல்லோரும் படித்துப் பயன் பெறுதல் வேண்டும்.

5-2-95

தஞ்சாவூர்

தங்கள் அன்புள்ள,

செயலர்