உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. புகழ் புரிந்த இல்

அவர்கள் வழி வழி முடியுடைய மன்னர்கள்.

வேழமுடைத்து மலை நாடு என்னும் பாராட்டுக்குரியவர். வானவர் என்றும் வானவரம்பர் என்றும் புகழப்பட்டவர். முடிமன்னராகிய அவர்களுக்கு இல்லாதவை எவை? இருந்தவை எவை என அறிய வேண்டுமா? பதிற்றுப்பத்து ஒன்றைப் பார்த்தாலே போதும்.

பாடு புலவர்களுக்கு அவர்கள் வழங்கிய கொடைப் பட்டியல் உள்ளதே! அவர்களின் வளத்தையும் வாழ்வையும் உளத்தையும் உயர்வையும் ஒருங்கே காட்டும்!

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இரண்டாம்பத்தின்

தலைவன்.

அவன் அவனைப்பாடிய குமட்டூர்க் கண்ணனார்க்கு

"உம்பற்காட்டு ஐந்நூறூர் பிரமதாயம் கொடுத்து முப்பத் தெட்டு யாண்டு தன்னாட்டு வருவாயிற் பாகம்" கொடுத்தானாம். நான்காம்பத்தின் தலைவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல். அவனைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார்க்கு

"நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கு கொடுத்தானாம். ஒன்பதாம்பத்தின் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறை. அவன் தன்னைப் பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு,

"மருளில்லார்க்கு மருளக் கொடுக்க வென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணம் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி எண்ணற் காகா அருங்கல வெறுக்கை யொடு பன்னீராயிரம் பாற்பட வகுத்துக் காப்புப்புறம்”

விட்டானாம்.