உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் -39

இவ்வேந்தர் வென்ற களங்கள் எத்தனை?

கொண்ட சிறப்புகள் எத்தனை?

ஆட்சித் திறங்கள் எத்தனை?

அறிவுக்கூர்ப்புகள் எத்தனை?

இவ்வள விருப்பினும் பாடு புலவர்கள் அவர்கள் பீடு விளங்கப் பேசிய பெருமை என்ன?

66

"இன்னார் கணவ" என்பதில் ருந்த ஏற்றம் எதிலும் கண்டிலர் போலும்; அதனால்,

"ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ" (14:15)

"திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ" (24 : 11)

'வாள் நுதல் கணவ" (38:10)

"நல் நுதல் கணவ" (42 : 7)

66

"ஆன்றோள் கணவ" (55:1)

""

“ 5@UCQUOT 36006” (61: 4)

"சேணாறு நறுநுதற் சேயிழை கணவ" (65 : 4)

"புரையோள் கணவ" (70 : 16)

"சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" (88:36)

என்றே பாடினர். இப்பதிற்றுப்பத்தின் வேந்தர் அனைவரும், தத்தம் மனைவியர் சீர்மையால் பாடு. சிறப்பொடும் விளங்குதல் பேற்றை வள்ளுவக் கிழவர் கண்டு கண்டு களித்தாரோ?

இப்பேறே எப்பேற்றினும் பேறென வியந்து வியந்து நின்றாரோ?

அதனால்,

"புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.” (59)

என்றாரோ?