உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. காலத்தினால் செய்த நன்றி

தட்டுத் தடுமாறி வந்தான்;

தள்ளாடிக் கீழே விழுந்தான்;

விழுந்த இடமோ சாலையோரச் சாய்க்கடை; விழுந்ததைக் கண்ட ஒருவன் ஓடிப்போகித் தூக்கினான்; நினைவே இல்லை!

ஆனால் மூச்சு இருந்தது.

அருகில் இருந்த கடையில் ஓடித் தண்ணீர் கொணர்ந்தான். மெல்லெனக் கண்ணைத் திறந்து பார்த்தான்.

தண்ணீர் தெளித்தவன் ஓடிப்போய்த் தேநீர் கொணர்ந்தான்; தன்னிலையற்றவனின் தலையைத் தூக்கிப்பிடித்துக் குடிக்க

வைத்தான்.

கண்ணைச் சுழற்றிப் பார்த்தான் மயங்கி விழித்தவன். உயர்ந்த கோபுரம் ஒன்று தெரிந்தது.

"என்ன அங்கே கூட்டம்?" என்றான்.

"கோபுரத்தின் மேலே இருக்கும் கடிகையாரம் ஓடவில்லை. அதனைச் சீர்செய அத்தனை பேர்கள்!'

ஆயினும் ஓடச்செய்ய முடியவில்லை என்றான் தேநீர்

தந்தவன்.

"எளிதாக நான் சீர் செய்வேன்" என்றான் மயங்கி விழித்தவன்.

பின்னரே உடையைப் பார்த்தான்; வீழ்ந்த சாய்க்கடை

அதனைப் பார்த்தான்!

அவனுக்கே கூட அருவறுப்பாக இருந்தது!