உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

ஆயினும் என்ன? நடந்தான், ஓடாக் கடிகாரத்தை

ஓடவைக்க!

உள்ளே விடுவரா?

"உடையும் ஆளும்! ஒதுங்கிப் போ" என்றனர்.

"யார் யாரோ பார்த்தும் ஒன்றும் ஆகவில்லை! நீ தானா செய்யப் போகிறாய்" என்று இகழ்ந்து பேசி வெளியே தள்ளினர். கோபுரத்தின் மேலே இருந்தவர் ஒருவர் ஒருவராய் இறங்கிப் போயினர்!

"இதனைச் சீர் செய்ய எங்களால் ஆகவில்லை" என்பதன் வெற்றி மிக்க தோல்வி நடை அது!

ஒருவனைத் தாழ்ந்து வேண்டினான்!

"என்னால் முடியும்; என்னைப் போகத் தடுக்கிறார்கள்; நீங்கள் உதவினால் என்னால் முடியும்" என்றான்.

ஏற இறங்கப் பார்த்தார்!

ஏதோ ஓர் இரக்கம்; அழைத்துப் போனார்.

மேலே போனதும், "கையால் தொடக்கூடாது; திறந்து காட்டுவோம்; பார்த்துக்கூறலாம்; உன் கைபட்டால் அந்த அழுக்கை என் செய்வது?

என்றனர்

ஒத்துக்கொண்டான்.

ஓரைந்து மணித்துளி!

எங்கே தடை என்பதைத் தெளிவாய்க் கண்டான்!

இவ்வாறு செய்க என்றான்!

என்ன வியப்பு!

‘டக் டக்' தொடங்கியது!

அவன் நாடித் துடிப்பும் ஒத்துப்பாடியது!

பத்தாயிரம் தாலர் பரிசு பழுது நீக்குவார்க்கு;

கோபுரத்தின் மேலே இருந்து படியில் இறங்கியா வந்தான்?

கொண்ட மகிழ்ச்சியில் கூடியிருந்தோர்,