உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல் தூக்கிக் கொண்டே வந்து விட்டனர்!

உடையின் அழுக்கு எங்கே போனது?

கையின் சேறு எங்கே சென்றது?

மூளைக் கூர்ப்பின் முன் மண்டியிட்டன!

77

தண்ணீர் தெளித்தவன் கண்ணீர் தெளித்தான் களிப்பு மீக்

கூர்ந்து!

கட்டிப்பிடித்தான்!

"ஐயோ மயங்கி வீழ்ந்த வேளையில் நானும் இல்லா திருந்தால்! எத்தகைய அறிஞன் - மேதை நீ" என்றான்.

"போகலாம்" என்று புதிய நண்பனொடு புறப்பட்டான். "உன் வீடு?" என்றான் நண்பன்.

"உன் வீடு!" என்றான் வந்தவன்! பசியின் களைப்புப் போக உண்டனர்.

பல நாள் பட்டுணி!

போன உயிரைப் போகவிடாமல் காத்தவன் செய்கை எளிய செய்கையா?

பசியாமல் கிடக்கும் ஒருவனுக்குப் பத்துவகைக் கறியொடு சோறு படைத்தால் என்ன பயன்? தீமை வேண்டுமானால் உண்டு;

பெற்றோர் தந்து பிறப்பு முடிந்து போகும் நிலையில்,

பின்னொரு பிறப்புத் தந்த தாயும் தந்தையும் ஆனவன் தண்ணீர் தெளித்தவன்தானே!

அவன் ஒரு குடும்பப் பொருளையோ காத்தான்?

உலகப்பொருளை அல்லவோ காத்தான்!

அந்த அறிஞன் -அறிஞரில் அறிஞன் எடிசன்!

அவன் உலகுக் களித்த கொடை ஒன்றா

ரண்டா?

உலகம் உள்ளவரை ஒழியுமா அவன் படைப்பின் பயன்பாடு!

சாகக்கிடப்பானைப் பிழைக்க வைக்கும் காலத்தினும்,

சிறந்த காலம் உண்டா? எவ்வளவு அரியது!