உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

தண்ணீர் தெளித்ததுதானே, அவனை விழிப்புறச் செய்த உதவி? எவ்வளவு பெரியது!

விழிப்பின் விளைவு, உலகுக்கு உதவிய உதவுதல் - இவ்வளவு அவ்வளவா? உலகம் உள்ளளவும் ஒழியா நலப்பேறு ஆகிவிட்டது அல்லவோ அது!

இத்தகும் உதவி என்ன, எளிதாய் எண்ணப்படுமோ?

நம் வள்ளுவக் கிழவர் இத்தகு காட்சி ஒன்றனைக் கண்டாரோ?

உதவினோன் உதவியை வியந்து வியந்து நின்றாரோ?

அதனால்

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது." (102)

என்றாரோ?