உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. எழுமை எழு பிறப்பும்

ஒரு சிறிய சிற்றூர்!

பெரிய வீடொன்று ஒருவர் கட்டினார்.

ஒருவருக்கொருவர் உதவும், சிற்றூர் வழக்கப்படி,

வண்டியுடையவர் வண்டி தந்தனர்;

மாடு இருப்பவர் மாடு தந்தனர்;

கூலி வேலையர் ஆளாய் வந்தனர்.

மரமும் கல்லும் வண்டி வண்டியாய் வேண்டும்!

ஏழு கல் தொலைவுக்கு அப்பாலேதான் கல்லும் மரமும் கிடைக்கும்!

கல்லுக்கு மலை!

மரத்திற்குப் பேரூர்.

ஒருவர் வண்டி மாட்டொடும் உதவிக்கு வந்தார்.

பாரம் நல்ல பாரம்!

மாடுகள் இரண்டும் ஊக்கமில்லை!

ஊருக்கு அருகில் ஓர் ஓடை!

மேலே மணல்;கீழே சேறு!

பார வண்டி இறங்கிற்று, இறங்கிற்று; கீழே கீழே!

மண்டி போட்டு இழுத்தன மாடுகள்!

வண்டியின் சக்கரம் ஆழ்ந்து தெப்பக்கட்டை தட்டும்

அளவு இறங்கினும் மாடுகள் தெம்பாய் இழுத்தன.

கரையை நெருங்கும் நிலைமை!