உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இளங்குமரனார் தமிழ்வளம்

39

மண்டியிட்டுக், கொம்பை நிமிர்த்திக், காதை விடைத்து, மூக்கை ஊன்றி, இழுத்த இழுவையில் ஒரு மாட்டின் கழுத்துக் கயிறு அறுந்தே போனது!

அறுந்த விரைவில் அப்படியே நிலத்தில் மோதி மூக்கு உடைபட மாடு இறந்தே போயிற்று!

பாரத்தை இறக்கி வேறு மாட்டைப் பூட்டி வண்டியைக்

கொண்டு சென்றனர்.

வண்டிப் பாரம் இறங்கியது!

வந்தவர்க்குப் பாரம், ஏறி அல்லவோ போயிற்று!

வீடு கட்டுபவர், உதவிக்கு வந்தவர் வீட்டைத் தேடி போனார். ஐம்பது உருபா மடியில் வைத்து, மாடொன்று பிடித்துக் கொள்ள வேண்டினார்.

மறுப்பெதும் இன்றித் தொகையைக் கொண்டு தக்க மாட்டைப் பிடித்துக் கொண்டார்!

அந்நாள் விலையில் அத்தொகை மிகுதி!

மூன்று திங்கள் கழிந்தன.

மாடு இறப்புக்குப் பணத்தைப் பெற்றவர் கொடுத்தவர் வீடுதேடி வந்தார்.

ஆம்! பணத்தைத் தந்தவர் புதிய வீட்டுக்கு!

மடியில் இருந்து உருபா ஐம்பத்தைந்து எடுத்தார்.

"உரிய போதில் உதவி செய்தீர்கள்!

பருத்தி நன்றாய் வெடித்தது!

இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றார்!

<<

'என்ன இது? உங்கள் மாட்டுக்கு, ஒரு மாடு வேண்டும் என்று தானே தந்தேன்; தொகையை வாங்க மாட்டேன்" என்று மறுத்தார் பணம் தந்தவர்.

"என் வேலைக்குப் போய் இப்படி இறந்து போனால் என்ன செய்வேன்?