உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல் இ

81

உங்களிடம் கடன் பணம் வாங்கி மாடு பிடித்தால் தர வேண்டுமா இல்லையா? அன்று என்னிடம் பணம் இல்லை! அதனால் பணத்தை வாங்கி மாடு பிடித்தேன்; பணம் இப்பொழுது தாராளமாக உள்ளது! வேண்டுமானால் ஐந்து உருபா கூடுதல் வைத்துள்ளேன்; அதனை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி ஐம்பது உருபாவைக் கட்டாயமாய்த் தந்தே போனார்! பணத்தை வாங்கிய பெரியவர் இன்று இல்லை!

பணத்தை தந்த பெரியவர் தாமும் இன்று இல்லை! மக்களின் மக்களின் மக்களும், அவர் தம் மக்களும் மக்களும்

உள்ளனர்!

புரிவு தெரிந்தோர் அனைவருக்கும் இச்செய்தி புதுவது ல்லை!

ஏனெனில் குடும்ப வரலாறு! அதன் விளைவென்ன?

இந்த நன்றி அந்த இருவர் குடும்பத்தும் இழையோடிக் கொண்டிருத்தல் எவரும் அறிந்தது!

வழிவழியாக இவ்வாறு நினைந்து போற்றும் நன்றியின் சிறப்பு ஊரூர்க்கில்லையா?

நற்குடி என்னும் எக்குடிக்கிவ்வரலாறு இல்லை!

போன பிறப்பு எங்கே பிறந்தேன்; எப்படிப் பிறந்தேன்; எனக்கு எவரெவர் என்னென்ன செய்தார்? எனக்குத் தெரிவதே ல்லை!

உங்களுக்காவது எவருக்கேனும் தெரியுமா?

உண்மை வேண்டும்! உண்மை உணர்வு வேண்டும்!

நெஞ்சே சான்றாய்க் கூறுதல் வேண்டும்!

இளந்தைப் பருவ நிகழ்ச்சிகள் எத்தனை நினைவில் உள்ளன?

ஆறறிவாகிய பிறப்பை அடைந்தும் மூன்று அகவைக் குள்ளே நடந்தவை எத்தனை நமக்கு நினைவில் உள்ளன?