உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 39

வாழ்வியல் பார்வை விடுத்து வறண்ட பார்வை வேண்டா?

தீராத் துயரைத் தீர்த்தவர் எனினும், நீங்கா நலத்தைச் சேர்ந்தவர் எனினும், அவர் தம் உதவியைப் பெற்று ஊன்றி நின்ற குடியினர் வழிவழியாகப் போற்றுவர் என்றால் வாழ்வியல் பார்வை!

இந்தப் பார்வையால் வள்ளுவக் கிழவர் முந்துறச் சொன்ன காட்சியைக் கண்டாரோ?

என்னே நல்லுளம் என்னே நல்லுளம் என்று வியப்புற நின்றாரோ?

அதனால்,

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவம் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு” (107)

என்றாரோ?

  • எந்தையார் படிக்கராமர் வீடு கட்டும் போது நிகழ்ந்தது இது; உதவிக்கு வந்த

பெரியவர் சக்ணர் என்பார். ஊர்: வாழவந்தாள்புரம்