உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஏதிலார் குற்றம் போல்

மாந்தன் ஒருவன் ஓவியம்!

ஓடுபவனையும் நிற்க வைக்கும் ஓவியம்!

ஓவியத் தோற்றமும் வண்ணமும், ஒருப்படா உளத்தையும் ஒருப்படச் செய்து தன்னையே நோக்க வைத்துவிடும்!

கூடிக் கூடி நின்றனர்

கூர்ந்து கூர்ந்து பார்த்தனர்.

வனப்பு ஓவியத்திற்கு ஒவ்வாத பொருள்கள் இரண்டு.

அவை பழஞ் செருப்புகள்!

இரண்டு கைகளிலும் இரண்டு செருப்புகள்,

ஒன்று வலக்கையில்!

மற்றொன்று இடக்கையில்!

வலக்கையில் இருப்பது இந்தா எடுத்துக்கொள் எனக்

கொடுப்பத போன்ற அமைப்பு.

முன்னது துணிவின் துடிப்புத் தோற்றம்.

பின்னது பணிவின் படிப்புத் தோற்றம்.

முன்னதில் உள்ள எழுத்து;

"என்னைப் புறஞ்சொன்னால் அவனை நான் அடிக்க” பின்னதில் உள்ள எழுத்து;

"நான் பிறரைப் புறஞ்சொன்னால் அவர் என்னை அடிப்பதற்குக் கொடுக்க”

கண்டவர் கலைக்கு வியந்தனர்!

தத்தம் நிலைக்கு வெதும்பினர்!

அவனைப் பற்றியதா அந்தக்காட்சியும் எழுத்தும்!