உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ-டு)

இறப்பு

நிகழ்வு

எதிர்வு

குறிப்பு

நடந்தனன்

நடக்கின்றனன்

நடப்பன்

குழையன்

85

நடந்தான் நடக்கின்றான் நடப்பான் குழையான்

ஆறறிவுயிர் :

உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறியும் அறிவோடு எப்பொருளையும் பகுத்தறியும் அறிவையும் பெற்றிருப்பது ஆறறிவுயிராகும்.

(எ-டு)

66

மக்கள், தேவர், நரகர், அசுரர், இயக்கர் முதலாயினோர்.

'மக்கள் தாமே ஆறறி வுயிரே" என்பது தொல்காப்பியநெறி, புனைவு நெறிபற்றித், தேவர் நரகர் அசுரர் இயக்கர் என ஒட்ட வைத்தது. நன்னூல்.

ஆறாம் வேற்றுமை உருபுகளேற்கும் பெயர்கள் :

ஆறாம் வேற்றுமை உருபுகள், தம்மையேற்ற பெயர்ப் பொருளை வருமொழிப் பொருளாகிய தற்கிழமைப் பொரு ளோடும் பிறிதின் கிழமைப் பொருளோடுந் தொடர்புடைய பொருளாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபட்ட சம்பந்தப் பொருளே இவ்வுருபுகளின் பொருளாம்.

(எ.டு) சாத்தன் கை - தற்கிழமை

சாத்தன் பொத்தகம்

கிழமை உரிமை.

ஆறாம் வேற்றுமையின் உருபுகள் :

பிறிதின் கிழமை

அது, ஆது, அ என்பவை ஆறாம் வேற்றுமை உருபு களாகும். இவைகளுள் அது ஆது என்ற உருபுகள் அஃறிணை யொருமைப் பெயரையும், அ உருபு அஃறிணைப் பன்மைப் பெயரையும் கொள்ளும். இவ்வுருபுகள் நிற்றற்குரிய விடங்களில் உடைய என்பது சொல்லுருபாக வந்து இருதிணை யொருமைப் பன்புப் பெயர்களையுங் கொள்ளும்.

(எ.டு)

சாத்தனது கை

தனாது கை