உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள் :

வை, அ, கள், வ் என்னும் விகுதிகளை இறுதியினுடைய பெயர்கள் அஃறிணைப் பலவின் பாற் படர்க்கைப் பெயர்களாம்.

(எ.டு) குழையவை, குழையன, மரங்கள், அவ்.

ஆகுபெயர் :

ஒரு பொருளின் இயற்பெயர், அப்பொருளைக் குறிக்காமல், அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளிற்குத் தொன்று தொட்டு வழங்கிவரின் அஃது ஆகுபெயர் எனப்படும். (எ-டு) ‘பாவை வந்தாள். பாவை போல்வாளைப் பாவை

என்றது ஆகுபெயர்.

ஆகுபெயரின் வகைகள் :

பொருளாகு பெயர், இடவாகுபெயர், காலவாகுபெயர், சினையாகுபெயர், குணவாகுபெயர், தொழிலாகுபெயர், எண்ணலளவாகுபெயர், எடுத்தலளவாகுபெயர், முகத்தலள வாகுபெயர், நீட்டலளவாகுபெயர், சொல்லாகுபெயர், தானியாகு பெயர், கருவியாகுபெயர், காரியவாகுபெயர், கருத்தாவாகுபெயர், உவமையாகு பெயர் எனப் பதினாறு

வகைப்படும்.

ஆக்கவினைக் குறிப்பு :

இது காரணம் பற்றி வரும் வினைக் குறிப்பாகும். இதற்கு ஆக்கச் சொல் விரிந்தாயினும் தொக்காயினும் வரும்.

(எ-டு) கல்வியாற் பெரியனாயினான் கல்வியாற் பெரியன்.

ஆண்பாலை உணர்த்தும் இளமைப் பெயர்கள் :

ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சேவு, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்ற பதினைந்தும் ஆண்பாலை உணர்த்தும் உணர்த்தும் இளமைப் பெயர் களாகும்.

ண்பால் படர்க்கை வினைமுற்று :

அன், ஆன் என்னும் இருவிகுதியையும் இறுதியிலுடைய மொழிகள் உயர்திணை ஆண்பாற் படர்க்கை வினைமுற்றுக் களாகும்.