உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

83

தொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிறமொழிப் பொருள் படத் தொகுவது அன்மொழித் தொகையாகும்.

(எ.டு)

1. பூங்குழலி இரண்டாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலிளையுடையாள் என விரியும்.

பொற்றொடியாள்

மூன்றாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. இது, பொன்னாலாகிய தொடியினையுடையாள் என

விரியும்.

அணியிலக்கணம் நான்காம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. இது அணிக்கு இலக்கணம் என விரியும்.

பொற்றாலி – ஐந்தாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னினாகிய தாலியியுைனைடயாள் என விரியும். சேரன்குடி - ஆறாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது சேரனது குடிமக்கள் இருக்கும் ஊர் என விரியும்.

கீழ் வயிற்றுக்கழலை ஏழாம் வேற்றுமைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. இது கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலை போல்வான் என விரியும்.

2. தாழ்குழலி

வினைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. தாழ்ந்த சூழலினையுடையாள் என விரியும்.

3. கருங்குழலி பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. கருமையான கூந்தலை உடையவள் என விரியும்.

4. தேன் மொழியாள் உவமைத் தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித் தொகை. தேன்போலும் மொழினை யுடையாள் என விரியும்.

5. உயிர் மெய்

உம்மைத் தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை. உயிரும் மெய்யும் கூடிப் பிறந்த எழுத்து என விரியும்

அஃறிணை

தாழ்வாகிய பகுப்பு, விலங்கு, பறவை முதலிய உயிருள்ள வற்றையும் நிலம், நீர், கல் முதலிய உயிர் அற்றவற்றையும் குறிக்கும். ஒன்றன்பால், பலவின்பால் ஆகிய இரண்டு பால்களும் இத்திணைக்கு உரிய பால்களாகும். அல் + திணை = அஃறிணை உயர்திணை அல்லாத திணை

(எ.டு)

களிறு மரங்கள்

ஒன்றன்பால்

பலவின்பால்.