உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

4 இளங்குமரனார் தமிழ்வளம்

(எ-டு) ஆவைக்கொணா என்றவிடத்து, ஆவை என்பது மாத்திரஞ்சொல்லிக் கொணா வென்பது சொல்லாவிடினும், கொணா வென்பது மாத்திரஞ்சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும் வாக்கியப் பொருளுணர்ச்சி உண் உண்டாகாது. ஆவைக்கொணா என இரண்டுஞ் சொல்லின், அவாய் நிலை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதலை அறியலாம்.

அழுங்கல் என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

அழுங்கல் என்னும் உரிச்சொல் அரவமாகிய இசைப் பொருண்மையையும், இரக்கம் கேடு ஆகிய பண்புகளையும்

த உணர்த்தும்.

(எ.டு) ‘உயவுப் புணர்ந்தன்றிவ் வழுங்கலூரே’

‘பழங்கணோட்ட முதலிய வழுங்கின னல்லனோ'

அளை மறி பாப்புப் பொருள் கோள் :

பாம்பு, புற்றில் நுழையும் பொழுது தலைமேலாகும்படி நிலைமாறுதல் இயல்பு. அவ்வாறே ஈற்று அடியில் ஈற்றில் நின்ற சொல் அதன் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ள அமைவது அளை மறிபாப்புப் பொருள் கோளாகும். அளை = புற்று; பாப்பு = பாம்பு.

(எ.டு)

'தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து

'தண்டூன்றித் தளர் வார் தாமும்

சூழ்ந்த வினையாக்கை சுட விளிந்து நாற்கதியில் சுழல்வார் தாமும்

மூழ்ந்த பிணி நலிய முன்செய்

வினையென்றே முனிவார்தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே'

....

ச்செய்யுளில் “வாழ்ந்த பொழுதினே வான் எய்து நெறிமுன்னி முயலாதார்” என்னும் ஈற்றடி மூழ்ந்த முனிவார், சுழல்வார், தாழ்ந்த... தளர்வார்” எனத்தலைகீழாக டையிலும் முதலிலும் சென்றடைதலை அறிக.

சூழ்ந்த

...

அன்மொழித் தொகை :

வேற்றுமைத் தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை,

உவமைத்தொகை, உம்மைத்தொகை

ஆகிய ஐந்து

தாகைநிலைத் தொடருந் தத்தம் பொருள் படுமளவிற்குத்