உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகை விளக்கு

காய்மரம்

வெண்டாமரை

ஊதுகோல்

சொல்

நாளரும்பு காலம்

இலைமரம்

சினை

செம்போத்து குணம்

தோய்தயிர்

அடை நிலைக்கிளவி என்னுந்தனிச்சொல் :

தொழில்

81

அடைநிலைக் கிளவியாகிய ‘ஆங்கு' என்னுந் தனிச் சொல், தாழிசைப் பின்னர் நடத்தலைப் பொருந்தியொழுகும். முன்னர் வருதலும் சிறுபான்மையுண்டு.

(எ-டு) கலிப்பாவில் காண்க.

அண்மை :

காலம் இடையீடின்றியும், வாக்கியப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுவது அண்மையாகும்.

(எ.டு) ஆவைக்கொணா என்பது, யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாகச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது. தொடராக விரைவாகச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலை அறியலாம்.

பொறுக்கி' என்று சொல்லி இடைவெளிவிட்டுப் பின்னர் ‘எடுத்தமாணிக்கம்’ என்றால் வசையா? இசையா? அமர்தல் என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

அமர்தல் என்னும் உரிச்சொல் மேவுதல் குறிப்புணர்த்தும்.

(எ.டு) ‘அகனமர்ந்து செய்யா ளுறையும்’

அரி என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு :

அரி என்னும் உரிச்சொல் குறிப்புணர்த்தும் ஐம்மை - அழகு.

(எ.டு) அரிமயிர்த்திரள் முன்கை’

அவாய் நிலை :

என்னுங்

ஐம்மை என்னுங்

ஒரு சொல் தனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றற்கு அவாய்நிலை என்று பெயர். அவாவுதல் அவாவல் = விரும்புதல்.