உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

4 இளங்குமரனார் தமிழ்வளம்

அடிமறிமாற்றுப் பொருள்கோள் :

எடுத்துக்

கூட்டும்

எடுத்து

பொருளுக்கு ஏற்ற இடத்தில் அடியினையுடையதும், ஏதேனும் ஓர் அடியை அச்செய்யுளின் முதல், இடை, கடை ஆகிய ஏதேனும் ஓரிடத்தில் கூட்டினாலும் பொருளுடன் ஓசை மாட்சியும், பொருட் சிறப்பும் வேறுபடாத அடியினையுடையதுமாகிய பொருள்கோளே அடி மறி மாற்றுப் பொருள் கோள் எனப்படும்.

(எ-டு) “மாறாக் காதலர் மலைமறந் தனரே;

ஆறாக் கண்பனி வரலா னாவே;

ஏறா மென்றோள் வளைநெ கிழும்மே; கூறாய் தோழியான் வாழு மாறே’

""

இதனுள் எவ்வடியை எங்கே கூட்டினாலும் பொருளும் ஓசையும் வேறுபடாமையை அறியலாம்.

)

அடுக்குச் சொல் :

ஒரு சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம் பற்றி இரண்டு முதல் மூன்று முறை அடுக்கிக் கூறப்படும். இஃது அடுக்குச் சொல் எனப்படும். அடுக்குத் தொடர் என்பதும் அது. அடுக்கு என்பது பல ஆதலால்.

(எ-டு) உண்டே னுண்டேன், போ போ போ விரைவு எய்யெய், எறிஎறிஎறி வெகுளி

அடைமொழி :

வருகவருக; பொலிக பொலிக பொலிக உவகை உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன் வாழேன்

துன்பம்.

பொருள் இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கே யன்றி இனமல்லாப் பொருள்களுக்கும் உலக வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிடத்தும் அடைமொழிகளாக வரும்.

(எ-டு)

இனமில்லன

இனமுள்ளன

பாற்குடம்

வயல்நெல்

உப்பளம்

பொருள்

ஊர்மன்று - இடம்