உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இசையெச்சம் :

இளங்குமரனார் தமிழ்வளம்

தன கைகள்

4

சாத்தனுடைய புதல்வன், சாத்தனுடைய புதல்வர், சாத்தனுடைய வீடு, சாத்தனுடைய வீடுகள்.

முற்றுத்தொடர் மொழியில் அவ்வவ்விடத்திற்கு ஏற்ப இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி நின்று வருவித்துரைக்கப் படுவது இசையெச்சமாகும்.

(எ.டு)

"அந்தாமரை யன்னமே நின்னை யானகன்றாற் றுவனோ?”

இதில், ‘என்னுயிரினும் சிறந்த நின்னை' எனப்பல சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சமாயிற்று.

இசைப் பொருளுணர்த்தும் உரிச்சொற்கள் :

துவைத்தல், சிலைத்தல், இயம்பல், இரங்கல் ஆகிய நான்கு சொற்களும் இசைப் பொருளுணர்த்தும் உரிச்சொற்களாகும். (எ.டு) ‘வரி வளை துவைப்ப

66

>

ஆமா நல்லேறு சிலைப்ப

""

“கடிமரந்தடியு மோசை தன்னூர் நெடுமதில் வரைப்பிற்கடிமனை யியம்ப

ஏறிரங்கிரு ளிடை’

""

இசைப்பு' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

இசைப்பு என்னும் உரிச்சொல் இசைப்பொருண்மையை யுணர்த்தும்.

(எ.டு) "யாழிசையூப் புக்கும்

இடக்கரடக்கல் :

""

இது தகுதிவழக்கின் வகைகளுள் ஒன்று. இடக்கரான (பெருமக்களிடத்தே சொல்லத் தகாத) மொழிகளை மறைத்து வேறுமொழிகளால் கூறுவது இடக்கரடக்கலாகும். அவை அல் கிளவி என்பதும் இதுவாம்.

(எ.டு) மலங்கழுவி வந்தான் கால் கழுவி வந்தான்.