உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இடவாகு பெயர் :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இடத்தின் பெயர் அவ்விடத்தைக் குறியாமல் அவ்விடத்தில் உள்ள பொருளுக்குப் பெயராகி வருவது இடவாகுபெயராகும். (எ-டு) ஊர்வந்தது - என்றதில் ஊர் என்னும் இடத்தின் பெயர் அதில் உள்ள மக்களுக்கு ஆயிற்று.

இடைச்சொல் ஏ, ஓ முன் வல்லினம் புணர்தல் :

டைச் சொற்களாகிய ஏ, ஓ என்பவற்றின் முன் வல்லினம் வந்தால் இயல்பாகும்.

(எ.டு) அவனே + கண்டான்

இடைச்சொல் :

அவனோ + கண்டான்

=

அவனேகண்டான்

அவனோகண்டான்

=

பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இன்றிப் பெயரையாவது வினையையாவது சார்ந்து வருஞ்சொல்லே இடைச்சொல்லாகும்.

இடைச்சொற்களின் பொருள் :

தெரிநிலையும், தெளிவும், ஐயமும், முற்றும், எண்ணும், சிறப்பும், எதிர்மறையும், எச்சமும், வினாவும், விருப்பமும், ஒழியிசையும், பிரிநிலையும், கழிதலும், ஆக்கமும் ஆகிய பதினான்கும் இடைச் சொற்களினுடைய பொருள்களாகும். இடைச்சொற்களின் வகைகள் :

வேற்றுமை யுருபுகளும் விகுதியுருபுகளும், இடைநிலை யுருபுகளும், சாரியை யுருபுகளும், உவமவுருபுகளும், தம் தமக்குரிய பொருளை உணர்த்தி வருகிற ஏ, ஓ முதலியவையும், செய்யுளிசை நிறைத்தற்கே வருபவையும், அசையாய் வருதலே பொருளாக நிற்பவையும், ஒலி அச்சம், விரைவு ஆகியவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவையும் ஆகிய ஒன்பதும் இடைச் சொற்களின் வகைகளாகும்.

இடைப்பிறவரல் :

வேற்றுமை யுருபுகளும், வினைமுற்றுகளும், பெயரெச்சங் களும், வினையெச்சங்களும், கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே வருமொழியோடு பொருந்தத்தக்க பிற சொற்கள் வரவும் பெறும். அவ்வாறு வருவதற்கு இடை பிறவரல் என்று பெயர்.

டைப்