உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ.டு) சாத்தன் (வயிறார) உண்டான்

அறத்தை (அழகுபெறச்) செய்தான்

வாளான் (மாய) வெட்டினான்

89

தேவர்க்குச் (செல்வம் வேண்டிச்) சிறப்பெடுத்தான் வேற்றுமை மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான்

சாத்தனது (இத்தடக்கை) யானை

ஊர்க்கண் (உயர்ந்தவொளி) மாடம்

சாத்தா (விரைந்து) ஓடிவா

வந்தான் (அவ்வூர்க்குப்போன) சாத்தன்

வினைமுற்று

வந்த (வடகாசி) மன்னன் பெயரெச்சம்

வந்து (சாத்தனின்றவனூர்க்குப்) போயினான்

இடைநிலை :

வினையெச்சம்

பகுபதங்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நிற்கும் இடைப் பகாப்பதங்களே இடைநிலைகளாகும். இவ்விடை நிலை காலங்காட்டும் இடைநிலை காலங்காட்டா விடைநிலை என இரு வகைப்படும்.

இடைப் போலி :

இது மூவகைப் போலிகளுள் ஒன்று. சொல்லுக்கு நடுவிற் சில விடத்து ஐகாரத்தின் பின்னும், யகர மெய்யின் பின்னும், வருகின்ற நகரமெய்யோடு ஞகரம் போலியாக வரும்.

(எ.டு) மைந்நின்ற = மைஞ்ஞின்ற

இடுகுறிப்பெயர் :

யாதொரு காரணமும் இன்றி, ஒரு

பொருளுக்கே

டப்பட்டுத் தொன்று தொட்டு வழங்கி வரும் பெயர் இடுகுறிப் பெயராகும். அப்பெயர், இடுகுறிப் பொதுப் பெயர், இடுகுறிச் சிறப்புப் பெயர் என இருவகைப்படும்.

(எ.டு)

இடுகுறிப் பொதுப்பெயர்

கல்

இடுகுறிச் சிறப்புப்பெயர் கருங்கல்.

“எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே”