உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம்

4

என்னும் தொல்காப்பிய நெறிக்கு ஏற்பட்ட சீர் கேடு இது. 'கல்' என்பது கரியது, வலியது, ஒலியுடையது முதலிய பொருளமைந்த சொல். கல் - ஒலிக்குறிப்பாய் மலையைக்குறிக்கும். “கல் எனக் கரைந்து விழும் கடும்புனல்”.

இயல்பு வழக்கு :

எப்பொருட்கு

அச்சொல்லாலேயே

எச்சொல்

இயல்பில் அமைந்ததோ

அப்பொருளைக் கூறுதல்

இயல்பு வழக்காகும். அது இலக்கணமுடையது, இலக்கணப் போலி, மரூஉ என மூவகைப்படும். அத்தலைப்புகளில் காண்க.

இயற்கை வினைக் குறிப்பு :

இது காரணம் பற்றாது இயற்கையை உணர்த்திவரும் வினைக் குறிப்பாம். இது ஆக்கச் சொல் வேண்டாதே வரும். (எ.டு) நீர் தண்ணிது

)

இயற்சொல் :

தீ வெய்து.

செந்தமிழ் நாட்டில் வழங்குஞ் சொல்லாகிய திரி சொற் போலாகாமல், படித்தவர்க்கு மாத்திரமேயன்றிப் படியாதவர்க்கும் தமது பொருள்களைத் தெரிவிக்கின்ற தன்மையையுடைய உலக வழக்குச் சொற்களே இயற்சொற்களாகும்.

(எ.டு)

மண், பொன் - பெயரியற் சொல்

நடந்தான், வந்தான் வ

வினையியற்சொல்

அவனை (இதில் உள்ள ஐ) இடையியற்சொல்

அழகு, அன்பு உரியியற்சொல்.

‘இயைபு’ என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

இயைபு என்னும் உரிச்சொல் புணர்ச்சிக் குறிப்பை யுணர்த்தும்.

(எ.டு) "இயைந்தொழுகும்

இலக்கணப்போலி :

""

இயல்பு வழக்கின் வகைகளுள் ஒன்று இலக்கணம் இல்லா தாயினும் இலக்கணம் உடையது போல அறிவுடையோரால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலியாகும்.