உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

(எ.டு) இல்முன் முன்றில்

இல்வாய் வாயில்.

இலக்கணமுடையது

91

இதுவும் இயல்புவழக்கின் வகைகளுள் ஒன்று இலக்கண நெறிப்படி வழங்கி வருவது இலக்கணமுடையது.

(எ.டு) நிலம், பொன்னன்.

இரங்கல் என்னும் உரிச்சொல் உணர்த்துங்குறிப்பு:

இரங்கல் என்னும் உரிச்சொல் இசையேயன்றிப் பொருளது கழிவாகிய குறிப்புமுணர்த்தும்.

(எ.டு)

‘செய்திரங்காவினை

இரட்டைக்கிளவி :

இரட்டைச் சொற்கள் அவ்விரட்டிப்பினின்றும் தனித்து

ஒலியா.

(எ-டு) சல சல மும்மதம் பொழிய.

இரண்டாம் வேற்றுமை :

இரண்டாம் வேற்றுமையின் உருபு ஐ ஒன்றேயாம். அதன்பொருள் ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல்,

உடைமை என்பன.

(எ.டு) குடத்தைவனைந்தான் ஆக்கப்படுபொருள்

கோட்டையை இடித்தான் அழிக்கப்படுபொருள்

ஊரைச் சேர்ந்தான் அடையப்படுபொருள்

வீட்டை விட்டான் நீக்கப்படுபொருள்

புலியைப் போன்றான்

ஒக்கப்படுபொருள்

பொன்னை உடையான்

டைமைப் பொருள்

இரத்தற்கு வருஞ் சொற்கள் :

ஈ, தா, கொடு என்னும் மூன்று சொற்களும் முறையே இழிந்தோன், ஒப்போன், உயர்ந்தோன்

ஆகிய மூவரும்

இரத்தற்குப் பயன்படுத்தும் சொற்களாகும்.