உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

4 இளங்குமரனார் தமிழ்வளம்

இருதிணைப் பொதுப் பெயர்கள் :

தந்தை, தாய், சாத்தன், சாத்தி, கொற்றன், கொற்றி, ஆண், பெண், செவியிலி, செவியிலிகள், தான், தாம் எனவரும் படர்க்கைப் பெயர்கள் உயர்திணை அஃறிணை இரண்டற்கும் பொதுப் பெயர்களாம்.

இருதிணைப் பொதுவினை :

ஆகிய

தன்மை வினைமுற்றுக்களும், முன்னிலை வினைமுற்றுக் களும், வியங்கோள் வினைமுற்றுக்களும், வேறு இல்லை, உண்டு என்கின்ற மூன்று குறிப்பு வினைமுற்றுக்களும், பெயரெச்சங் களும், வினையெச்சங்களும் இருதிணைக்கும் உரிய பொது வினைகளாகும்.

இருதிணை மூவிடப் பொதுப்பெயர் :

எல்லாம் என்னும் பன்மைப் பெயர், உயர்திணை, அஃறிணை ஆகிய இரண்டு திணைகளுக்கும், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியமூன்றிடங்கட்கும் பொதுப் பெயராகும்.

(எ.டு) நாமெல்லாம், நீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம்.

இருபெயரொட்டாகு பெயர் :

வகரக்கிளவி என்றவிடத்து ஒருபொருட்கு இருபெயர் ஒட்டி நிற்க, அவற்றுள் ஒருபெயர் ஆகுபெயராக நிற்றலால் இருபெயரொட்டாகு பெயராயிற்று.

(வகரக்கிளவி என்பதிற் கிளவி என்பது சொல்லை யுணர்த்தும் போது இயற்பெயர்; சொற்குக் கருவியாகிய எழுத்தை உணர்த்தும்போது ஆகு பெயர். வகரக்கிளவி வகரமாகிய எழுத்து எனப் பொருள்படும்)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை :

ஆகிய என்னும் பண்புருபு மறைந்து நிற்கப் பொதுப் பெயரோடு சிறப்புப் பெயராயினுஞ் சிறப்புப் பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து தொடர்வது இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாகும்.

ரு

(எ.டு) ஆயன் சாத்தன்

சாரைப்பாம்பு

_

பொதுப் பெயரோடு சிறப்புப்பெயர்.

சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்.