உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் தமிழ்வளம்

110

(எ.டு) தொல்காப்பியர் படி

இதில்

4

தொல்காப்பியர்

என்னுங்கருத்தாவின் பெயர் அவராற் செய்யப்பட்ட நூலுக்கு ஆயிற்று. கருத்துணர்ச்சி :

ஒரு சொல் எப்பொருளைத் தர வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைக் கால இடச் சூழலால் (சமய விசேடத்தால்) அறிதல் கருத்துணர்ச்சியாகும்.

(எ.டு) மாவைக் கொண்டுவா என்றவிடத்து, மாவென்பது பலபொருளொரு சொல்லாதலால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற் சொல்லப்படின் தின்னும் மாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் நிற்பானாற் சொல்லப்படின் சொல்லப்படின் குதிரை யெனவும் சொல்லுவான் கருத்து சமய விசேடத்தால் அறியப்படும். அப்பொழுது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலை அறியலாம். கருவியாகு பெயர் :

காரணத்தின் பெயர் காரியத்துக்கு ஆவது கருவியாகு

பெயராகும்.

(எ.டு) திருவாய் மொழி ஓதினான் இதில் மொழி என்னும் கருவியின் பெயர் அதனாலாகிய நூலுக்கு ஆயிற்று.

கருவிப் பொருள் :

வினைமுதற் றொழிற் பயனைச் செயப்படுபொருளிற் சேர்ப்பது. அக்கருவிப் பொருள் முதற் கருவி செயப்படு பொரு ளோடு ஒற்றுமையுடையது. துணைக் கருவி முதற் கருவிக்குத் துணையாய் அது காரியப் படுமளவும் உடனிகழ்வது.

(எ.டு) மண்ணாற் குடத்தை வனைந்தான் மகன் முதற் கருவி தண்ட சக்கரங்களாற் குடத்தை வனைந்தான் தண்ட சக்கரம் துணைக்கருவி.

கருவி என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

கருவி என்னும் உரிச்சொல் தொகுதி என்னுங் குறிப் புணர்த்தும். (எ.டு) கருவி வானம்'

‘கவவு’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

கவவு என்னும் உரிச்சொல் “அகத்தீடு” என்னுங் குறிப்பை யுணர்த்தும்.