உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

111

(எ.டு) “கவவுக்கை நெகிழாமல்

>>

கவர் என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

கவர் என்னும் உரிச்சொல் விருப்பம் என்னுங் குறிப்பை யுணர்த்தும்.

(எ-டு) “கவர் நடைப்புரவி

""

கழுமென் கிளவியுணர்த்துங் குறிப்பு :

கழும் என்னும் உரிச்சொல் மயக்கமாகிய குறிப்பை யுணர்த்தும்.

(எ-டு) கழுமிய ஞாட்பு' ஞாட்பு – போர்

‘கன்று’ என்னும் இளமைப் பெயர் பெறும் விலங்கினங்கள் :

யானை, குதிரை, கழுதை, கட மை, மான், எருமை, மரை, கவரி, கரடி, ஒட்டகம் ஆகிய பத்தும் கன்று என்னும் இளமைப் பெயரைப் பெற்று வரும்.

காரண இடுகுறிப் பெயர் :

காரணம் கருதிய பொழுது அக்காரணத்தையுடைய பலபொருள்களைக் குறிக்குமாயினும், பல பொருள்களையும் குறிக்கக் காரணம் இருந்தும் அக்காரணத்தை உடைய ஒரு பொருளுக்கே வழங்கி வரும் பெயர் காரண இடுகுறிப் பெயர் எனப்படும். (காரணம், இடுகுறி, காரண இடுகுறி என்பவை பின்னூல் முறை)

(எ.டு) முள்ளி, நாற்காலி

காரணப் பெயர் :

ஒரு பொருளுக்கு யாதானும் ஒரு காரணம்பற்றி வரும் பெயர் காரணப் பெயராகும். அது காரணப் பொதுப் பெயர், காரணச் சிறப்புப் பெயர் என்று இரண்டு வகைப்படும்.

(எ.டு) காரணப் பொதுப்பெயர்

அணி

காரணச் சிறப்புப் பெயர் வளையல்

_

காரியவாகு பெயர் :

காரியத்தின் பெயர் காரணத்துக்கு ஆகுவது காரியவாகு

பெயராம்.