உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

113

குணவாகு பெயர் :

குணத்தின் பெயர் அதனையுடை டய

(குணிக்கு) ஆகி வருவது குணவாகு பெயராகும்.

பொருளுக்கு

(எ-டு) வெள்ளை கொண்டு வந்தான் இதில் வெள்ளை என்னும் நிறக் குணப் பெயர் அதனையுடைய ஆடைக்கு ஆயிற்று. குரங்கு என்னும் விலங்கு பெறும் இளமைப் பெயர்கள் :

குரங்கும் அதன் இனமாகிய முசு, ஊகம் ஆகியவையும், குட்டி, மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு, குழவி என்னும் ஆறு இளமைப் பெயர்களையும் பெற்று வரும்.

‘குருளை’ என்னும் இளமைப் பெயர் பெறும் விலங்கினம் :

நாய், பன்றி, புலி, முயல், நரி என்னும் ஐந்து விலங்குகளும் குருளை, குட்டி, பறழ் என்னும் மூன்று இளமைப் பெயர்களைப் பெறும். நாயை ஒழிந்த நான்கு விலங்குகளும் பிள்ளை என்னும் ளமைப் பெயரையும் பெற்று வரும்.

குழூஉக் குறி :

இது தகுதி வழக்கின் வகைகளுள் ஒன்று. ஒரு கூட்டத்தார் ஒரு காரணத்தால் ஒரு பொருளின் சொற்குறியை நீக்கி வேறொரு சொல்லால் அப்பொருளைக் கூறுவது குழுஉக் குறியாகும்.

(எ-டு) பொன்னைத் தட்டார் பறி என்று கூறுவார்.

கள்ளைக் குடியர். சொல் விளம்பி என்று கூறுவர்.

‘குழவி' என்னும் இளமைப் பெயர் பெறுவன :

யானை, பசு, எருமை, கட மா, மரை, குரங்கு, முசு, ஊகம் ஆகிய எட்டும் குழவி என்னும் இளமைப் பெயரைப் பெற்று வரும்.

குறிப்பின் வரும் இடைச் சொற்கள் :

அம்மென, இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென, சுஃறென எனவும், கடக கடவென, களகளவென, திடுதிடென, நெறுநெறென, படபடவென எனவும் வருவன ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.