உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

குறிப்பு மொழி :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எழுத்தொடும் சொல்லொடும் புணராமல் சொல்லினால் பொருள் உணரப்படும் மொழி குறிப்பு மொழியாகும்.

குறிப்பு வினை :

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறையும் அடியாகக் கொண்டு பிறந்து, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், தொழில் என்ற ஆறனுள் கருத்தா ஒன்றையே காட்டுதல் குறிப்பு வினையின் இலக்கணமாகும்.

(எ-டு) குழையன் பொருள்

ஊரன் இடம் ம

ஓணத்தான் காலம்

கண்ணன் சினை

கரியன் பண்பு

நடையன் தொழில்

குறிப்பு வினையெச்ச விகுதிகள் :

அ,றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து என்னும் எட்டும் குறிப்பு வினையெச்ச விகுதிகளாகும்.

(எ.டு) மெல்ல, அன்றி, அல்லது, அல்லால், அல்லாமல், அல்லாக்கடை, அல்லாவிடத்து.

குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் :

வரும்.

குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் அகர விகுதி பெற்று

(எ-டு) கரிய குதிரை.

குறிப்பு வினைப் பெயரெச்ச விகுதி :

அ என்ற ஒன்று மட்டும் குறிப்பு வினைப் பெயரெச்ச விகுதியாகும்.

(எ.டு) கரிய