உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

குறிப்பு வினைமுற்று விகுதிகள் :

,

115

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈ என்னும் இருபத்திரண்டுங் குறிப்பு வினைமுற்று விகுதிகளாகும்.

(எ-டு)

கரியன், கரியான், கரியள், கரியாள், கரியர், கரியார், கரியன, குறுந்தாட்டு, கரிது, குழையிற்று, கரியென், கரியேன், கரியம், கரியாம், கரியெம், கரியேம், கரியோம், கரியை, கரியாய், வில்லி, கரியிர், கரியீர்.

'கொல்' என்னும் இடைச்சொல் :

கொல் என்னும் இடைச்சொல் ஐயப் பொருளிலும், அசை

நிலைப் பொருளிலும் வருகிற இடைச் சொல்லாகும்.

ஐயம்

(எ.டு) அவன் சாத்தன் கொல், கொற்றன் கொல் கற்றதனாலாய பயனென் கொல் அசை நிலை.

சித்திரவண்ணம் :

நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் சார்ந்து வருவது சித்திர

வண்ணம்.

(எ-டு) ஓரூர் வாழினுஞ் சேரிவாரார்

சேரிவரினும் ஆரமுயங்கார்

சிறப்புப் பெயர் இயற்பெயர் :

திணை, நிலம், குலம், குடி, உடைமை, குணம், தொழில், கல்வி ஆகிய காரணம் பற்றி வருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெயரினாலும், ஒரு பொருளைச் சேர்த்துச் சொல்லுமிடத்துச் சிறப்புப் பெயரை முன் வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாகும்.

(எ.டு) குறவன் கொற்றன்

சோழியன் சாத்தன்

பார்ப்பான் துரோணன்

சோழன் நள்ளி குடி

பொன்னன் வளவன்

60)

நிலம்

குலம்

உடைமை

கரியன் கண்ணன்

குணம்