உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நடையன் நாதன்

தொழில்

_

கல்வி

தமிழ்ப் புலவன் கபிலன்

சிறப்பையுணர்த்தும் உரிச்சொற்கள் :

கூர்ப்பும், கழிவுமாகிய இரண்டு

ஒன்றனது சிறத்தலாகிய பண்பையுணர்த்தும்.

(எ.டு) ‘துனிகூ ரெவ்வமொடு'

கழிகண்ணோட்டம்’

சினையாகு பெயர் :

உரிச்சொற்களும்

சினைப் பொருளின் பெயர் முதற் பொருளுக்கு ஆகுவது சினையாகு பெயராகும்.

(எ.டு) வெற்றிலை நாட்டான்

என்றதில் இலை எ ன்

என்னும்

சினையின் பெயர் அதன் கொடிக்கு ஆயிற்று.

‘சாயல்' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

சாயல் என்னும் உரிச்சொல் மென்மையாகிய பண்பை யுணர்த்தும்.

(எ.டு) ‘சாயன்மார்பு'

சீர்த்தி என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்பு :

சீர்த்தி என்னும் உரிச்சொல் பெரும் புகழையுணர்த்தும்.

(எ-டு) 'வயங்கல் சால் சீர்த்தி’

சுழற்சியாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

அலமரலும் தெருமரலுமாகிய இரண்டு உரிச் சொற்களும் சுழற்சியாகிய குறிப்புணர்த்தும்.

(எ-டு) அலமரலாயம்

தெருமரலுள்ள மொடன்னை துஞ்சாள்

சேர் என்னும் உரிச்சொல் உணர்த்தும் குறிப்பு :

சேர் என்னும் உரிச்சொல் திரட்சி என்னுங் குறிப் புணர்த்தும்.

(எ.டு) 'சேர்ஞ்’ செறி குறங்கு