உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

சொல் மரபு :

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் நால்வகைச் சொல்லின் இயற்கையால் யாப்பின் வழிப்பட்டது மரபாகும். சொல்லதிகாரத்தோடு பொருந்தி வருவது இயற் சொல் மரபாகும். தமிழ் நாட்டகத்தும் பல்வகை நாட்டினும் தத்தமக்குரித்ததாக வழங்கும் மரபு திரி சொல் மரபாகும். செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு திசைச் சொல் மரபாகும். வட சொல் மரபாவது திரிந்த வகையாகிய சொல் மரபாகும்.

சொல்லாகு பெயர் :

சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆகுவது சொல்லாகு

பெயராகும்.

(எ.டு) இந்நூலுக்கு உரை செய்தான் என்றதில் உ ரைர என்னுஞ் சொல்லின் பெயர் அதன் பொருளுக்கு ஆயிற்று.

சொல்லெச்சம் :

முற்றுத் தொடர் மொழியில் (வாக்கியத்தில்) ஒரு சொல் எஞ்ச நின்று வருவித்துரைக்கப்படுவதற்குச் சொல்லெச்சம் என்று பெயர்.

(எ.டு) "பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா

ரிறைவ னடிசேரா தார்

இதில் சேர்ந்தார் பிறவிப் பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்று வருவித்துரைக்கப்படுவதால் சொல்லெச்ச மாயிற்று.

தகுதி வழக்கு :

பொருள்களுக்கு இயல்பாய் ஏற்பட்ட இயல்பாய் ஏற்பட்ட சொற்களை ஒழித்துத் தகுதியான வேறு சொற்களால் அப்பொருளைக் கூறுதல் தகுதி வழக்காகும். அது இடக்கரடக்கல், மங்கலம், குழுஉக் குறி என மூன்று வகைப்படும்.

தகுதி :

பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமை தகுதியாகும்.

நீர்

(எ-டு) நீரானனை என்னுமிடத்து, நனைத்தலின் கருவியாதலால் தடையுணர்ச்சியில்லை. ஆகவே, தகுதி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலை யறிக.