உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

119

‘தட' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :

தடவென் கிளவி பெருமை, கோட்டம் ஆகிய பண்புகளை

யுணர்த்தும்.

(எ.டு) ‘வலிதுஞ்சு தடக்கை வாய்வாட் குட்டுவன்’

'தடமருப் பெருமை

தன்மையொருமை வினைமுற்று :

கு, டு, து, று என்கின்ற நான்கு விகுதிகளையும் இறுதி யிலுடைய குற்றியலுகரமாகிய மொழிகளும், அல், அன், என், ஏன் என்கின்ற நான்கு விகுதிகளையும் இறுதிலுடைய மொழி களும், உயர்திணை ஆண்பால், பெண்பால், அஃறிணை ஒன்றன் பால் என்னும் மூன்றுக்கும் பொதுவாகிய தன்மையொருமைத் தெரிநிலை முற்றும் குறிப்பு வினைமுற்றும் ஆம். கு, டு, து, று என்னும் நான்கும் தாமே காலங்காட்டுதலால் குறிப்பு வினைக்குவாரா. அல்விகுதி இடைநிலையோடு

தெரிநிலையில் எதிர்காலத்தில் மாத்திரமே வரும்.

சேர்ந்து

(எ.டு)

இறப்பு

நிகழ்வு

உண்டு

எதிர்வு

உண்டு

குறிப்பு

வந்து

வருவது

சென்று

சேறு

செய்வல்

உண்டவன்

உண்கின்றவன்

உண்பன்

குழையன்

உண்டனென்

உண்கின்றனென்

உண்பென்

குழையென்

உண்டேன்

உண்கின்றேன்

உண்பேன்

குழையேன்

தாப்பிசைப் பொருள்கோள் :

செய்யுளிடையில் நின்ற சொல் முதலிலும் இறுதியிலும் சென்று இயைந்து பொருளைப் புலப்படுத்துவது தாப்பிசைப் பொருள் கோள் எனப்படும்.

66

(எ-டு) உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு