உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

121

(எ.டு) பசுவைப் பெற்றம் என்பது தென்பாண்டி நாட்டுச் சொல். தாயைத் தள்ளை என்பது குட்ட நாட்டுச் சொல். தந்தையை அச்சன் என்பது குடநாட்டுச் சொல். வஞ்சகரைக் கையர் என்பது கற்கா நாட்டுச் சொல் தோட்டத்தைக் கிழார் என்பது வேணாட்டுச் சொல். சிறுகுளத்தைப் பாழி என்பது பூழி நாட்டுச் சொல் வயலைச் செய் என்பது பன்றி நாட்டுச் சொல்

சிறு குளத்தைக் கேணி என்பது அருவா நாட்டுச் சொல்.

திணைவழுவமைதி :

மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால் ஒரு திணைப் பொருள் வேறு திணைப் பொருளாகவுஞ் சொல்லப்படும்.

(எ-டு)

1. ஒரு பசுவை ‘என் அம்மை வந்தாள்” எ என்பது உவப்பினால் அஃறிணை உயர்திணையாயிற்று.

""

2. “பசுங்கிளியார் சென்றார்க்கு என்பது உயர்த்திச் சொல்லுதலால் அஃறிணை உயர்திணையாயிற்று.

3. “தம் பொருளென்ப தம் மக்கள்” என்பது சிறப்பினால் உயர்திணை அஃறிணையாயிற்று.

4. “ஏவவும் செய்கலான் தான் தேரா னவ் வுயில், போஓமளவு மோர் நோய்” என்பது கோபத்தினால் உயர்திணை அஃறிணையாயிற்று. 5. “நாம் கடவுளுடைமை என்பது இழிவினால் உயர்திணை

அஃறிணையாயிற்று.

திரிசொல் :

""

ஒரு பொருளையே தெரிவிக்கின்ற பல சொற்களாகியும், பல பொருள்களைத் தெரிவிக்கின்ற ஒரே சொல்லாகியும், கற்றவர்களால் மாத்திரமே அறியப்படுகிற பொருளை யுடையவை திரிசொற்களாம்.

(எ-டு) கிள்ளை, தத்தை என்பன கிளி என்னும் ஒரு பொருளைக் குறித்த பல பெயர்த்திரி சொல்.