உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

4 இளங்குமரனார் தமிழ்வளம்

காசு குற்றம், பொன், மணி முதலிய பல பொருள்களைக் குறித்த ஒரு பெயர்த்திரிசொல்.

படர்ந்தான், ஏகினான், சென்றான் என்பவை என்கின்ற ஒரு பொருள் குறித்த பல வினைத் திரி சொல்.

போனான்

வரைந்தான் இது நீக்கினான், கொண்டான், எழுதினான் முதலிய பல பொருள்களைக் குறித்த ஒரு வினைத் திரி சொல்

தில்லிடைச் சொல் :

தில்லென்னும் இடைச் சொல் ஆசை, காலம், ஒழியிசை ஆகிய மூன்று பொருளையுந் தரும்.

66

""

(எ-டு) 'வார்ந்திலங்குவை யெயிற்றுச் சின்மொழி யைப் பெருகதில் லம்ம யானே விழைவு "பெற்றாங் கறிகதில் லம்மவிவ் வூரே

66

வருகதில் லம்ம வெஞ்சேரி சேர”

துணிவுப் பொருளையுணர்த்தும் விகுதிகள் :

யரிவை

காலம்

ஒழியிசை

விடு, ஒழி என்னும் விகுதிகள் துணிவுப் பொருளை யுணர்த்தும் விகுதிகளாகும்.

(எ.டு) வந்து விட்டான், கேட்டொழிந்தான்

துயவுவென் கிளவி உணர்த்துங் குறிப்பு :

துயவு வென்னும் உரிச் சொல் அறிவு வேறுபடுதலாகிய குறிப்புணர்த்தும்.

(எ.டு) ‘துயவுற் றேம் யாமாக

‘துவன்று’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

துவன்று என்னும் உரிச்சொல் தனிமை என்னும் பண்பையுணர்த்தும்.

(எ.டு) ஆரியர் துவன்றிய பேரிசை மூதூர்’

செயப்படு பொருள் :

கருத்தாவினது தொழிலின் பலனை அடைவது. அது கருத்திற் செய்யப்படுவதும், கருத்தின்றிச் செய்யப்படுவதும், இருமையற் செய்யப்படுவதும் என மூவகைப்படும். அது அகநிலையாகவும் தானே கருத்தாவாகவும் வரும்.