உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

123

(எ-டு)

சோற்றையுண்டான் என்ற விடத்து, சோறு உண்ணப்படுவதாக வினை முதலால் இச்சிக்கப்பட்ட செயப்படு பொருள்.

சோற்றைக் குழைவித்தான் என்றவிடத்து சோறு, குழைக்கப்படுவதாக வினைமுதலால் இச்சிக்கப்படாத செயப்படு பொருள்.

பதரையும் நெல்லையும் பணத்திற்குக் கொண்டான் என்றவிடத்து, பதர், கொள்ளப்படுவதாக வினைமுதலால் விரும்பப்படாத செயப்படு பொருள், நெல், கொள்ளப்படுவதாக வினைமுதலால் விருப்பம்பட்ட செயப்படு பொருள்.

நடத்தலைச் செய்தான் எனத் தெரிநிலைகள் விரிதுரைக்குமிடத்துச் செயப்படு பொருள் அகநிலையாய் வந்தது.

தன்னைப் புகழ்ந்தான் எனச் செயப்படு பொருளே கருத்தாவுமாயிற்று. செயப்படு பொருள் குன்றிய வினை :

செயப்படு பொருளை வேண்டாது வரு முதனிலை அடியாகத் தோன்றும் வினை செயப்படு பொருள் குன்றிய வினையாகும்

(எ-டு) வளவன் நடந்தான்.

செயப்படு பொருள் குன்றாத வினை :

செயப்படு பொருளை வேண்டி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றும் வினை செயப்படு பொருள் குன்றா வினையாகும்.

(எ-டு) மாமூலன் உணவு உண்டான்

செயப்பாட்டு வினை :

படுவிகுதி புணர்ந்த முதனிலை அடியாகத் தோன்றி, வினை முதல் மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படு பொருள் எழுவாயிலும் வரும் வினை செயப்பாட்டு வினையாம்.

(6T. (1)

வளவனால் பாடம் படிக்கப்பட்டது

செய்யுமென்முற்று :

செய்யுமென்னும் வாய்பாட்டுத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுள்ளே பலர்பாலொழிந்த நான்கு பால்களுக்கும் பொதுவாய் வரும்.