உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

125

தெரிநிலை வினை:

கருத்தாவும், கருவியும், இடமும், தொழிலும், காலமும், செயப்படு பொருளும் ஆகிய அறுவகைப் பொருளையுந் தருவது தெரிநிலை வினையாம்.

(எ.டு)

வனைந்தான்

தெரிநிலை வினைமுற்றின் பாகுபாடு :

ஆண்பால் முதலிய ஐம்பால் வினைமுற்றுகளையும் படர்க்கையிடத்திலும், ஒருமை வினைமுற்றையும், பன்மை வினைமுற்றையுந் தன்மையிடத்திலும் முன்னிலையிடத்திலும் வைத்து மூன்று காலங்களிலும் பெருக்கிக் கணக்கிட, படர்க்கை வி னைமுற்றுக்கள் பதினைந்து, தன்மை வினைமுற்றுக்கள், ஆறு, முன்னிலை வினைமுற்றுக்கள், ஆறு ஆக தெரிநிலை வினைமுற்றுப் பதம் இருபத்தேழாம்.

1.

(எ.டு)

நடந்தான், நடந்தாள், நடந்தார், நடந்தது, நடந்தன. இவை இறந்த காலப் படர்க்கை வினைமுற்று.

நடக்கின்றான், நடக்கின்றாள், நடக்கின்றார்கள், நடக்கின்றது, நடக்கின்றன. இவை நிகழ்காலப் படர்க்கை வினைமுற்று.

நடப்பான், நடப்பாள், நடப்பார்கள், நடக்கும், நடப்பன. இவை எதிர்காலப் படர்க்கை வினைமுற்று.

2. நடந்தேன், நடந்தோம். வை இறந்தகாலத் தன்மை வினைமுற்று.

நடப்பேன், நடப்போம் இவை எதிர்காலத் தன்மை வினைமுற்று. நடக்கின்றேன், நடக்கின்றனம். இவை நிகழ்காலத் தன்மை வினைமுற்று.

3. நடந்தாய், நடந்தீர். இவை இறந்தகால முன்னிலை வினைமுற்று.

நடப்பாய், நடப்பீர். இவை எதிர்கால முன்னிலை வினைமுற்று.

நடக்கின்றாய், நடக்கின்றீர். இவை நிகழ்கால முன்னிலை வினைமுற்று.