உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இளங்குமரனார் தமிழ்வளம்

4

தெரிநிலை வினைமுற்று விகுதிகள் :

அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, இர், ஈர், க, இய, இயர், ஆல், ஏல், மின், உம் முப்பத்தெட்டும் தெரிநிலை வினைமுற்று

என்னும் விகுதிகளாகும்.

(எ.டு)

நடந்தனன், நடந்தான், நடந்தாள், நடந்தனள், நடந்தனர் நடந்தார், நடப்ப, நடமார், நடந்தன, நடவா

உண்கு, உண்டு, நடந்தது, கூயிற்று, நடந்தனென் நடந்தேன், நடப்பல், நடப்பம், நடப்பாம், நடப்பெம் நடப்பேம், நடப்போம், உண்கும், உண்டும், வருதும் சேறும், நடந்தனை, நடந்தாய், நடத்தி, நடந்தனிர் நடந்தீர், வாழ்க, வாழிய, வாழியர், மறால்

அழேல், நடமின், உண்ணும்

தெரிநிலைவினையின் பிரிவு :

தெரிநிலை வினைச் சொற்கள் செயப்படுபொருள் குன்றிய வினை, செயப்படு பொருள் குன்றாவினை, தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை என வெவ்வேறு வகையிற் பிரிவு பட்டு நிற்கும்.

தெரிநிலை வினையின் பகுதிகள் :

நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வெள, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்ற இருபத்துமூன்று ஈற்றையுடைய சொற்களெல்லாம் செயவென்னும் வாய்பாட்டு ஒருமை யேவலும் மற்றைத் தெரிநிலை வினைகளின் பகாப்பதமாகிய பகுதியும் ஆம்.

தெரிநிலை வினைப் பெயரெச்ச விகுதிகள் :

அ, உம் என்னும் இரண்டும்

பெயரெச்ச விகுதிகள்.

(எ.டு) செய்த, செய்கின்ற, செய்யும்.

தெரிநிலைவினைப்