உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

தெரிநிலை வினைப் பெயரெச்சத்தின் வகை :

127

செய்த வென்னும் வாய்பாட்டிறந்த காலப் பெயரெச்சம் எனவும், செய்கின்ற வென்னும் வாய்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சம் எனவும், செய்யு மென்னும் வாய்பாட்டெதிர்காலப் பெயரெச்சம் எனவும் மூவகைப்படும்.

தெரிநிலை வினையெச்ச விகுதிகள் :

இ, ய், பு, ஆ, ஊ, என, அ, ன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, டத்து, உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டும் தெரிநிலை வினை வினையெச்ச விகுதிகளாகும். இவற்றுள் இறுதியிற் கூறிய மல், மை, மே என்னும் மூன்று விகுதிகளும் எதிர்மறையில் வரும். உண்ணுா,

(எ.டு) நடந்து, ஓடி, போய், உண்குபு, உண்ணா,

உண்டென, உண்ண, உண்ணின், உண்டால், உண்டக்கால்,

உண்டானேல், உண்டானெனின், உண்டானாயின், உண்டானேனும், உணற்கு, உண்ணிய, உண்ணியர், வருவான், உண்பான், உண்பாக்கு, செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து, காண்டலும், உண்ணாமல், ண்ணாமை, உண்ணாமே.

தெரிநிலை வினையெச்சங்களின் வகை :

செய்பு என்னும் வாய்பாட்டிறந்தகால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினையெச்சம் எனவும், செயின் என்னும் வாய்பாட் டெதிர்கால விெையச்சம் எனவும் தெரிநிலை வினையெச்சங்கள் மூவகைப்படும்.

'தெவு' என்னும் உரிச் சொல் உணர்த்துங் குறிப்பு :

என்னும் உரிச்சொல் கொள்ளுதல்

தெவு குறிப்புணர்த்தும்.

(எ.டு) ‘நீர் தெவு நிரைத் தெழுவார்’

‘தெவ்வு’ என்னும் உரிச்சொல் உணர்த்துங் குறிப்பு :

என்னுங்

தெவ்வு என்னும் உரிச்சொல் பகைமை என்னும் பண்பை யுணர்த்தும்.

(எ.டு) ‘தெவ்வுப் புலம்'.