உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்

129

தொகை நிலைத் தொடர் மொழிகளிற் பொருள் சிறக்கும் இடங்கள் : தொகை நிலைத் தொடர் மொழிகளுள்ளே வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், முன் மொழியிலாயினும் பின் மொழியிலாயினும் பொருள் சிறந்து நிற்கும். வினைத் தொகையிலும், உவமைத் தொகையிலும் முன் மொழியிற் பொருள் சிறந்து நிற்கும். உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் ாருள் சிறந்து நிற்கும். அன்மொழித் தொகையில் இரு மொழியுமல்லாத புற மொழியிற் பொருள் சிறந்து நிற்கும்.

தொகை நிலைத் தொடர் :

வேற்றுமை யுருபு முதலிய உருபுகள் நடுவே மறைந்து நிற்க ரண்டு முதலிய சொற்கள் ஒரு தன்மைப் பட்டுத் தொடர்வது தொகை நிலைத் தொடராகும். இது வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என ஆறு வகைப்படும்.

(எ.டு) நிலங்கடந்தான் இரண்டாம் வேற்றுமைத் தொகை

தலை வணங்கினான் மூன்றாம் வேற்றுமைத் தொகை

கூலி வேலை செய்தான் - நான்காம் வேற்றுமைத் தொகை

மலைவீழருவி

ஐந்தாம் வேற்றுமைத் தொகை

சாத்தன் கை

காட்டில் மழை பெய்தது

ஊறுகாய் வினைத்தொகை

ஆறாம் வேற்றுத்ை தொகை

ஏழாம் வேற்றுமைத் தொகை

சதுரப் பலகை

பண்புத் தொகை

பவள வாய்

உவமைத் தொகை

புற்பூண்டு உம்மைத் தொகை

பூங்கொடி வந்தாள்

அன்மொழித் தொகை

தொடர் மொழி :

பகாச்சொல், பகுசொல் ஆகிய இவ்விரண்டு சொற்களும் இரண்டு முதலியனவாகத் தொடர்ந்து நின்று ஒவ்வொரு