உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம்

4

சொல்லுக்கும் ஒவ்வொரு பொருளாக இரண்டு முதலிய பல பொருள்களைத் தருவது தொடர் மொழியாகும்.

(எ.டு) நிலம் கடந்தன், சாலப்பகை

தொழிலாகு பெயர் :

தொழிலின் பயர் அதனையுடைய பொருளுக்குப் பெயராக ஆகி வருவது தொழிலாகு பெயராகும்.

(எ-டு) வற்றல் உண்டான் என்றதில் வற்றல் என்னும் தொழிற் பெயர் அத் தொழிலையுடைய ஓர் உணவுக்கு ஆயிற்று. தொழிற் பெயர் விகுதிகள் :

தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்னும் பத்தொன்பதும் பிறவுந் தொழிற் பெயர் விகுதிகளாம்.

(எ.டு) நடத்தல், ஆடல், வாட்டம், கொலை, நடக்கை, பார்வை, போக்கு, நடப்பு, வரவு, மறதி, புணர்ச்சி, புலவி, விக்குள், சாக்காடு, கோட்பாடு, தோற்றரவு, வாரானை, நடவாமை, பாய்த்து. நசையாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

நம்பும் மேவும் ஆகிய உரிச் சொற்கள் நசையாகிய குறிப்புணர்த்தும்.

(எ.டு) "நயந்து நாம்விட்ட நன்மொழி நம்பி”

“பேரிசை நவிரமே அறையுமே'

""

நடுக்கமாகிய குறிப்புணர்த்தும் உரிச்சொற்கள் :

அதிர்வும், விதிர்வுமாகிய இரண்டும் குறிப்பையுணர்த்தும் உரிச் சொற்களாகும்.

66

(எ-டு) ‘அதிர வருவதோர் நோய்”

“விதிர்ப்புற வறியா வேமக் காப்பினை

‘நளி' என்னும் உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் :

நடுக்கமாகிய

""

நளியென் கிளவி பெருமை என்னும் பண்பினையும், செறிவாகிய குறிப்பையும் உணர்த்தும்.

66

(எ.டு) நளி மலை நாடன்

“நளியிருள்”